×

கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து தொழிலாளி பலி

சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து தொழிலாளி பலியானார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூரை சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தி (55), நேற்று மதியம் பழைய கொள்ளிடம் ஆற்றில் மாட்டை குளிக்க வைத்துள்ளார். பின்னர் தானும் குளித்தபோது முதலை ஒன்று அவரது காலை கவ்வி உள்ளே இழுத்து சென்றது. அவரது அலறலை கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்தபோது, நடு ஆற்றுக்குள் கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. சற்று நேரத்தில் முழுவதுமாக ஆற்றுக்குள் அவரை இழுத்து சென்று விட்டது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்து படகு மூலமாக பல மணி நேர தேடுதலுக்கு பின், சுந்தரமூர்த்தியின் சடலத்தை மீட்டனர்.

The post கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kottam river ,Kuttukudalore ,Chitambaram ,Cuddalore ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம்: சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு!