×

பெரியார் பிறந்த நாள்; சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தந்தை பெரியார் பிறந்த நாளான 17ம் தேதி(இன்று) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா- கலைஞர் சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.

The post பெரியார் பிறந்த நாள்; சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Social Justice Day ,CHENNAI ,DMK ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...