×

மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று கூறி மகளிர் உரிமை தொகையை வங்கிகள் பிடிக்கக்கூடாது: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: ‘‘குறைந்தபட்ச தொகையை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. வங்கிகள், சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் தற்பொழுது தமிழக அரசு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ள ரூபாய் ஆயிரத்திலிருந்து குறைந்தபட்ச தொகை இல்லாததற்கான தண்டத் தொகையும், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தொகையையும் வங்கிகள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இதனால் சம்பந்தபட்ட குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வங்கித்துறை அதிகாரிகளுடன் பேசி குறைந்தபட்ச தொகை இல்லை என்கிற காரணத்தினால் எந்த தொகையும் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 முழுமையாக சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

The post மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று கூறி மகளிர் உரிமை தொகையை வங்கிகள் பிடிக்கக்கூடாது: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chief Minister ,Chennai ,K.Balakrishnan ,Dinakaran ,
× RELATED அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம்...