×
Saravana Stores

சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

மதுரை: சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை வாங்குவோரின் முழு விவரங்களை போலீஸ், மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கி விசாரித்த நீதிபதி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்று கூறினார். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது. சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நீதிபதி வழங்கினார்.

The post சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Viegar ,Igourd Branch ,Madurai ,High Court ,Vijayakar ,Vineyagar ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனை கட்டிடங்களின்...