
- காங்கிரசு சபை
- ஹைதெராபாத்
- சோனியா
- ராகுல்
- மல்லிகார்ஜுன் கர்கே
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
- தெலுங்கானா
- 5 காங்கிரஸ் கமிட்டிகூட்டம்
ஐதராபாத்: தெலங்கானாவில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி உருவான பிறகு முதல்முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று மதியம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை ஐதராபாத் வந்தனர்.
இந்த கூட்டத்திற்கு 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 84 பேர் கலந்து கொண்டனர். 4 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், மறுசீரமைப்புக்கு பிறகு முதல்முறையாக இந்த கூட்டம் நடைபெற்றது. தெலங்கானாவில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதால், அம்மாநில தேர்தல் அறிக்கை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநில தேர்தல்களும் தெலங்கானா தேர்தலுடன் சேர்ந்து நடைபெறவுள்ளதால், அந்த தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐதராபாத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: சோனியா, ராகுல் பங்கேற்பு appeared first on Dinakaran.