×

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் சிக்கியுள்ள இழுவைக் கப்பலை மீட்பதில் தொடர்ந்து பின்னடைவு..!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் சிக்கியுள்ள இழுவைக் கப்பலை மீட்பதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுறும் நிலையிலும், 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான பணிகள் முழுவீச்சிலும் நடந்து வருகிறது. இந்த 5 மற்றும் 6 அணு உலைகளுக்கான நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் ஏற்றப்பட்டு இழுவை கப்பல் மூலம் கடல் வழியாக இழுத்து வரப்பட்டது. இந்த மிதவை கப்பல் கூடங்குளம் அணு உலை அருகே வந்தபோது இழுவைக் கப்பலில் இருந்து மிதவை கப்பலை இழுக்க பயன்படுத்தப்பட்ட கயிறு அறுந்து விட்டது. இதையடுத்து மிதவை கப்பல் கடல் அலையில் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள பாறையில் தட்டி நின்றது. மிதவை கப்பலை மீட்கும் பணியில் இழுவைக் கப்பல் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடல் சீற்றத்தால் 8 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள இழுவைக் கப்பலில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இழுவை கப்பலில் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடும் பணிகள் மிகுந்த சவாலாக இருப்பதாக தொழில்நுட்பக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இழுவைக் கப்பலை செப்பனிடாமல் பலூன் தொழில்நுபம் மூலம் மீட்கப்பட்டால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மும்பையில் இருந்து வந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் இழுவைக் கப்பலின் தற்போதைய நிலையை அறிய புகைப்படம் எடுத்து ஆராய்ந்து வருகின்றனர். இழுவைக் கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலன்களை, தரையில் இருந்து ராட்சத கிரேன் மூலம் மீட்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் சிக்கியுள்ள இழுவைக் கப்பலை மீட்பதில் தொடர்ந்து பின்னடைவு..!! appeared first on Dinakaran.

Tags : Kudankulam nuclear power plant ,Nellai ,Kudankulam Nuclear Power Station ,Kudankulam… ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...