×

புதுச்சேரியில் 75ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை பொய் தகவலை கூறியுள்ளார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் 75ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை பொய் தகவலை கூறியுள்ளார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துளார். புதுச்சேரியில் கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகள், மற்ற உதவித்தொகை எதையும் பெறாமல் இருந்தால் அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் ஒப்புதல் அளித்திருந்தார். புதுச்சேரியில் இத்திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது புதுச்சேரியில் 75 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பொய் தகவலை கூறியுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர்; பாஜகவினர் பொய் கூறுவதில் கைதேர்ந்தவர்கள்; அதில் தமிழிசை சவுந்திரராஜனும் ஒருவர். தேர்தலில் நிற்க சர்ச்சைக்குரிய வகையில் ஆளுநர் தமிழிசை பேசி வருகிறார். தேர்தலில் நின்று டெபாசிட் வாங்காதவர் தமிழிசை சவுந்திரராஜன், 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு என்.ஆர்.காங். – பாஜக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். என்று அவர் கூறினார்.

The post புதுச்சேரியில் 75ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை பொய் தகவலை கூறியுள்ளார்: நாராயணசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Governor ,Tamil Niladu ,Narayanasamy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு