×

ராமசாமி படையாட்சியாரின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றிட உறுதியேற்போம்! : டிடிவி தினகரன்

சென்னை : ராமசாமி படையாட்சியார் அவர்கள் பிறந்த இந்நாளில் அவரின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றிட உறுதியேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றியவரும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன் வாழ்நாள் முழுவதும் போராடியவருமான திரு.எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.விவசாய குடும்பத்தில் பிறந்து ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு செலுத்திய திரு.ராமசாமி படையாட்சியார் அவர்கள் பிறந்த இந்நாளில் அவரின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றிட உறுதியேற்போம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ராமசாமி படையாட்சியாரின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றிட உறுதியேற்போம்! : டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Ramasamy ,DTV Dinakaran ,Chennai ,RAMASAMI ,DTV ,Dinakaran ,
× RELATED மழைநீர் பாதிப்பில் இருந்து...