அண்ணாநகர், செப். 16: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயம்ேபடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படவில்லை என்றும், அந்தந்த கடைகளிலேயே காய்கறி, பூ மற்றும் பழங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைத்து தரும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். கோயம்பேடு மார்க்கெட் அருகே மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், சிறப்பு சந்தைக்கு அனுமதி இல்லை. கோயம்பேடு மார்க்கெட் சாலையோரத்தில் நடைபாதை கடைகளை அமைத்து, போக்குவரத்து நெரிசலை உருவாக்க வேண்டாம். அவ்வாறு தடையை மீறி நடைபாதை கடை அமைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்,’’ என்றனர்.
மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் போன்ற பல்வேறு விசேஷ நாட்களில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. அதுபோல தற்போதும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு சந்தை அமைக்கும்படி மார்க்கெட் நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். எனினும், கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டி மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், மார்க்கெட்டிலேயே அந்தந்த கடைகளில் காய்கறி, பழங்கள், பூ மற்றும் விற்பனை செய்ய அங்காடி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது,’’ என்றனர்.
The post கடைகளிலேயே பூ, பழம் விற்க அனுமதி விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு சந்தை கிடையாது: கோயம்பேடு அங்காடி நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.
