×

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

போளூர், செப்.16: போளூர் அடுத்த மாம்பட்டு ராமாபுரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி(50). இவரது கணவர் முனுசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 1 மகன். 2 மகள்களுக்கும் திருமணமாகி சென்று விட்டனர். மகன் சந்தோஷ்(21) பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சரஸ்வதி தனது பெரிய மகளை பார்க்க வந்தவாசிக்கு சென்றார். நேற்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போளூர் போலீசில் சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில், எஸ்ஐ ஐயப்பன் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

The post காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Polur ,Saraswati ,Mampattu Ramapuram ,Munusamy ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக்கில் மோதல் பீர் பாட்டிலால் இருவருக்கு குத்து வாலிபர் கைது