×

தூத்துக்குடி அருகே குளத்தில் பெண் சடலம்

தூத்துக்குடி, செப். 16: தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், சுப்பிரமணியபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 12.9.2023 இரவு மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகேஸ்வரி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் கோரம்பள்ளம் அருகே உள்ள கைலாசபுரம் குளத்தில் அவர் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. தகவலறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தூத்துக்குடி அருகே குளத்தில் பெண் சடலம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Selvakumar ,Subramaniapuram Meletheru ,Koramballam ,
× RELATED தூத்துக்குடியில் பைக், பணம் திருடிய 2 பேர் கைது