×

சுவர் சீரமைக்க நடவடிக்கை டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

சிவகிரி, செப்.16: வாசுதேவநல்லூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் மலை வளங்கள் மிகப்பெரிய பொக்கிஷங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் தொடங்கி நீலகிரி மாவட்டம் வரை 1500 கிலோ மீட்டர் தூர மேற்குத்தொடர்ச்சி மலை நமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகும். வாசுதேவநல்லூர் மேற்கே மிக குறைந்த செலவில் கட்டப்பட்டது தான் செண்பக கால்வாய் அணை பகுதி. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ராஜசிங்கபேரி, குலசேகரப்பேரி கால்வாய் என இரண்டாக பிரிகிறது. . இந்த அணை கட்டில் 20 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரத்தில் இருந்தது. இது இடிந்து விட்டது. இதனால் இங்கு பெய்யும் மழை நீர் அரபிக்கடலுக்கு வீணாக சென்று கலக்கிறது.

தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வந்தால் தென்காசி மாவட்டத்தின் பெரும் பகுதி வளம் பெறும். தலையணை பகுதி சீர் செய்யப்பட வேண்டும். சில கோடி ரூபாய் செலவில் செண்பகவல்லி தடுப்புச்சுவர் சரி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதுகுறித்து கேரளா சென்று பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தலையணை பகுதியிலிருந்து தண்ணீர் பிரியும் இடத்தை டாக்டர் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார். அவருடன் ரேஞ்சர் சிக்கந்தர் பாஷா, புதிய தமிழகம் நிர்வாகிகள் சாமி துரை, குணா, செல்வராஜ், திருமலைச்சாமி, ராஜா, தேவேந்திரன், பால்ராஜ், செல்வராஜ், மணிகண்டன், சுரேஷ், செல்வசுந்தர், கணேசன், லட்சுமணன், சுப்புராஜ்,சூசையப்பன்,மரியதாஸ், கணேஷ் குமார், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சுவர் சீரமைக்க நடவடிக்கை டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dr. ,Krishnasamy ,Sivagiri ,New Tamil Nadu Party ,President ,Krishnaswamy ,Vasudevanallur ,
× RELATED மருத்துவர் பத்திரிநாத் இழப்பு...