×

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து பாஜ யாத்திரை

பெங்களூரு: காவிரி நதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதால், கர்நாடக மாநில விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கும் கூட்டம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, டி.வி.சதானந்தகவுடா, பசவராஜ்பொம்மை உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் துணைமுதல்வர் அஷ்வத் நாராயண் பேசியபோது, தமிழ்நாட்டிற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.`இந்தியா’ கூட்டணியில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக இடம் பெற்றுள்ளதால், அந்த கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தண்ணீர் திறந்துவிட்டு மாநில விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. பாஜ விவசாய பிரிவு சார்பில் விவசாயிகள் நலனுக்காக பாஜ சார்பில் ‘காவிரி நதி பாதுகாப்பு யாத்திரை’ நடத்தப்படும்’ என்றார்.

The post தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து பாஜ யாத்திரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bengaluru ,Cauvery river ,Karnataka ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...