×

வெளியேறினார் சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறைக்கு புதிதாக பொறுப்பு இயக்குனர் நியமனம்

புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி சஞ்சய்குமார் மிஸ்ரா கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒன்றிய அரசு அடுத்தடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்தது. மேலும் வருகிற நவம்பர் 16ம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு வழங்கிய பதவி நீட்டிப்பு செல்லாது, அது சட்டவிரோதம் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் ஒன்றிய அரசு சார்பில் அக்டோபர் 15ம் தேதி வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும்படி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில் செப்டம்பர் 15ம் தேதி வரை சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியை நீட்டித்து உத்தரவிட்டது. தற்போது அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனராக உள்ள 1993ம்ஆண்டு பேட்ஜ் ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீனை அமலாக்கத்துறை பொறுப்பு இயக்குனராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பீகார் மாநிலத்தை சேர்ந்தராகுல் நவீன் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குனரை முறைப்படி நியமனம் செய்யும் வரை இயக்குநரின் பொறுப்புகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளியேறினார் சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறைக்கு புதிதாக பொறுப்பு இயக்குனர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sanjay Kumar Misra ,New Delhi ,IRS ,Sanjaykumar Misra ,Enforcement Enforcement ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு