×

கம்பத்தில் மளிகை கடையில் ஓட்டை பிரித்து பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

 

கம்பம், செப். 16: கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் முருகன் (41). இவர் நேற்று முன் தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் காலையில் கடையை திறந்துள்ளார். அப்போது கடைக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டும், மேற்கூறையில் தகர சீட்டு அகற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் வைத்திருந்த சுமார் 58 ஆயிரம் ரூபாய் மற்றும் பழுது பார்ப்பதற்காக வைத்திருந்த 10 செல்போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து முருகன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் எஸ்ஐ இளையராஜா தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த கடையில் முகர்ந்து பார்த்த மோப்பநாய் மாரியம்மன் கோயில், வரதராஜபுரம் தெரு காந்தி சிலை வரை ஓடி நின்றது.

ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை, இதையடுத்து போலீசார் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது முகக்கவசம் அணிந்து வந்த நபர் மேற்கூரையில் உள்ள தகரத்தை அகற்றிவிட்டு கடைக்குள் இறங்கி , பணத்தை திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.

The post கம்பத்தில் மளிகை கடையில் ஓட்டை பிரித்து பணம் கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gampad ,Kampham ,Murugan ,Kambam Chelandiyamman ,Gamba ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பகுதிகளில் குழந்தைகளை...