×

மயிலாடும்பாறை அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

வருசநாடு, செப். 16: மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மயிலாடும்பாறை யூனியன் சேர்மன் சித்ராசுரேஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பொன்னன்படுகை ஊராட்சி மன்ற தலைவர் பூங்காகாத்தமுத்து முன்னிலை வகித்தார். இதில் திமுக கடமலை மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, துரைசாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாயகிருஷ்ணன், திமுக வர்த்தக அணி நிர்வாகி குறிஞ்சி மாடசாமி, கிளைக் கழக நிர்வாகிகள் கர்ணன், சந்திரன், மனோகரன் ஜெயபால் , ஆசையன் உள்ளிட்ட ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் சளி, இருமல், கண்புரை காது பொது மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முளைப்பயிர்கள் சத்து மாவுகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார மருத்துவர் ஜக்கப்பன், ஊராட்சி செயலர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்தனர்.

The post மயிலாடும்பாறை அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kapom Medical Camp ,Mayilatumparai ,Varusanadu ,Ponnanpadugai ,Mailadumpara ,Mayiladumparai… ,Mayiladumparai Medical camp ,
× RELATED வருசநாடு, க.மயிலாடும்பாறை பகுதிகளில்...