×

சிங்கம்புணரி பள்ளியில் விளையாட்டு விழா

 

சிங்கம்புணரி, செப். 16: சிங்கம்புணரிசேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் 13வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரிபோனி கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் உள்ளம் புத்துணர்ச்சி பெறும் என்றார்.

மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கொக்கோ, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கராத்தே, சிலம்பம், உள்ளிட்ட மாணவர்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பள்ளி துணை முதல்வர் பூமிநாதன், மீனா உடற்கல்வி ஆசிரியர் நிவேதா, உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post சிங்கம்புணரி பள்ளியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Sports Festival ,Singampunari ,School ,13th Sports Festival ,Singampunarisevugamurthy Matriculation School ,Senthilkumar ,Singampunari school ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி சுற்றுவட்டார...