×

அண்ணா 115 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மன்னார்குடியில் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

 

மன்னார்குடி, செப். 16: தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் திமுக, திக, அதிமுக, அமமுக உள் ளிட்ட கட்சியினர் ருக்குமணிக்குளம் பகுதியில் உள்ள அவரது உருவ சிலை க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக : தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் முன்னிலையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக் குழு தலைவர் தலையாமங்கலம் பாலு,.நகர் மன்ற தலைவர் மன்னை சோழ ராஜன், மாவட்ட திமுகவை தலைவர் மேலவாசல் தனராஜ், தலைமைக்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகரச் செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் சித்தேரி சிவா, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்வி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திக சார்பில் மாவட்ட தலைவர் சித்தார்த்தன், அதிமுக சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணி க்கம், நகர செயலாளர் ஆர்ஜி குமார், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், நகர செயலாளர் ஆன ந்தராஜ், மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் சரவணச்செல்வன் உள்ளிட் டோர் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர்.

The post அண்ணா 115 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மன்னார்குடியில் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna ,Mannargudi ,Former ,Chief Minister of ,Tamil Nadu ,Perarinar Anna ,
× RELATED மன்னார்குடி, கூத்தாநல்லூரில் வருவாய்...