×

தஞ்சாவூர் மாதாகோட்டை புறவழிச்சாலையில் மருத்துவக்கழிவுகள், குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்

 

தஞ்சாவூர், செப். 16: தஞ்சாவூர் மாதாகோட்டை புறவழிச்சாலையில் அதிகளவில் குப்பை கொட்டுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. தஞ்சாவூர் அடுத்த மாதாகோட்டை புறவழிச்சாலை பகுதிகளில் சாலையோரத்தில் மருத்துவக்கழிவுகள், கோழி கழிவுகள், குப்பைகள் கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொண்டு வந்து கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோர், மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த புகையால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குப்பை கொட்டுவதன் மூலம் ஏற்படும் துர்நாற்றத்தால் அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் இதே செயலை சிலர் செய்து வருகிறார்கள். இங்கு கொட்டப்படும் குப்பைகளில் அதிகமானது மருத்துவக்கழிவு மற்றும் கோழி கழிவாகும். இவர்களுக்கு அபராதம் விதித்தாலும் மீண்டும், மீண்டும் இதே செயலை செய்து வருகிறார்கள். இரவு நேரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் யார் என்பது தெரியாமல் போகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அங்கு கொட்டப்படும் குப்பைகளில் அதிகளவு கொசுக்கள் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் முதியவர்கள், சிறியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்னையில் தலையிட்டு நிரந்தரமாக அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் மாதாகோட்டை புறவழிச்சாலையில் மருத்துவக்கழிவுகள், குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Matakottai Bypass ,Thanjavur ,Dinakaran ,
× RELATED கரந்தை சி.ஆர்.சி. டெப்போ எதிரில் சாய்ந்து நிற்கும் சிக்னல் விளக்கு கம்பம்