×

115வது பிறந்தநாள் தஞ்சாவூரில் அண்ணா சிலைக்கு மாலையணிவிப்பு

 

தஞ்சாவூர்,செப்.16: பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் தஞ்சாவூர் கீழவாசல் காமராஜ் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன, மகேஷ்கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மாநகர செயலாளர் சண்.ராமநாதன், மாநில நிர்வாகிகள் இறைவன், ஜித்து, அஞ்சுகம்பூபதி, மாவட்ட பொருளாளர் எஸ்.ஜி.அண்ணா, மாவட்ட துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, கனகவள்ளி பாலாஜி, எஸ்.என்.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, துரை.ஜெயககுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, முரசொலி, செல்வக்குமார், ரமேஷ், பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பின்பு அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post 115வது பிறந்தநாள் தஞ்சாவூரில் அண்ணா சிலைக்கு மாலையணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anna ,Thanjavur ,Central District ,Durai ,Chandrasekaran ,MLA ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாநகராட்சி திரையரங்கம்...