×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

 

அரியலூர்,செப்.16: அரியலூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று (16ம்தேதி) நடக்கிறது என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் நடத்தும் கலைஞைர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (16ம்தேதி) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செந்துறையில் நடைபெறுகிறது.

அது சமயம் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் DDU-GKY திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளது. இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண், பெண் (இருபாலரும்) திரளாக கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி