×

பெரம்பலூர் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது

 

பெரம்பலூர்,செப்.16: பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது. தேர்வை முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பிளஸ்-2 மற்றும் 11ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதன்படி 12ம் வகுப்புக்கு நேற்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. வருகிற 19ம் தேதி ஆங்கிலம் பாடத்திற்கும், 20ம்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடங்களுக்கும், 21ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்புத் திறன் பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.

22ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் மற்றும் வேளாண் அறிவியல் பாடங்களுக்கும், 25ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஆபீஸ் மேனேஜ்மெண்ட் அண்டு செக்ரட்ரிஷிப், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களுக்கும், 27ம் தேதி வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் தினமும் காலை 9.45 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது. காலை 9.30 மணிக்கு முன்பாக தேர்வு அறைக்கு மாணவர்கள் வந்து சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்புக்கு நேற்று தமிழ் பாடத்திற்கு தேர்வு நடைபெற்றது.

வருகிற 19ம்தேதி ஆங்கிலம் பாடத்திற்கும், 20ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்புத்திறன் பாடங்களுக்கும், 21ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், ஆபீஸ் மேனேஜ் மெண்ட் அண்டு செக்ரட்ரி ஷிப், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களுக்கும், 22ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கும், 25ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் பாடங்களுக்கும், 27ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் மற்றும் வேளாண் அறிவியல் பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. 11ம் வகுப்புக்கான தேர்வுகள் தினமும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவடைகிறது.

மதியம் 1 மணிக்கு முன்பாக தேர்வு அறைக்கு மாணவர்கள் வந்து சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, வருகிற 19ம் தேதி முதல் 27ம்தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்கிறது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Principal Education ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு