×

கோமல் அரசு பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா

 

குத்தாலம்,செப்.16: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம்,கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘தமிழ்க்கூடல்’ என்ற தலைப்பிலான இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை வகித்தார். தமிழாசிரியை விஜயராணி வரவேற்றார். உதவி தலைமையாசிரியர்கள் வேல்முருகன் மற்றும் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தனராக தமிழ்நாடு பாட நூல் வல்லுநர் குழு உறுப்பினர் திருஞானசம்பந்தன் ‘தமிழின் இனிமை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆசிரியை சாந்தி தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் கவிதை, பேச்சு, பாட்டு திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. விழாவை ஆசிரியர் ராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர் ரவிக்குமார், ஆசிரியர்கள் பிரகாஷ், வினாத், முருகன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.

The post கோமல் அரசு பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Literature Club ,Komal Government School ,Kutthalam ,Komal Government High School ,Mayiladuthurai District ,Kutthalam Union ,Forum ,Dinakaran ,
× RELATED குத்தாலம் ஆலங்குடி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு