×

விநாயகர் சதுர்த்தி விழா: மயிலாடுதுறையில் போலீசார் அணிவகுப்பு

 

மயிலாடுதுறை, செப்.16: மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்ததி விழா கொண்டாட உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி ஆற்றில் விசர்ஜனம் செய்ய உள்ளனர்.
மயிலாடுதுறை நகரில் மட்டும் 47 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது,

விழாவில் எந்தவித அசம்பாவிதம் இன்றியும், அச்சமின்றி மக்கள் கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை போலீசார் அணிவகுப்பு நடத்தினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் தொடங்கிய போலீசார் அணிவகுப்பை எஸ்.பி., மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., வேணுகோபால் தலைமையில் டி.எஸ்.பி., சஞ்ஜீவ்குமார், இன்ஸ்பெக்டர் செல்வம் உட்பட திரளான போலீசார் காந்திஜிரோடு, பட்டமங்கலத்தெரு, பழைய ஸ்டேட் பாங்க் ரோடு, போஸ்ட்ஆபீஸ் சாலை ஆகிய பகுதகளில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

The post விநாயகர் சதுர்த்தி விழா: மயிலாடுதுறையில் போலீசார் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi Festival ,Mayiladuthurai ,Vinayaka Chaturthi festival ,Tamil Nadu ,Vinayagar Chaturthi Festival: ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக வாசக்டமி இருவார விழா