×

நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

 

வேலாயுதம்பாளையம், செப். 16: கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் வுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவரது மாணவி கல்யாணி (35) .இவரது மகள் ஹர்சினி (18). இவர், புன்னம் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக ஹர்சினி வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் சென்று கேட்டபோது மாணவி ஹர்சினி, கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவுசெய்தனர். ஹர்சனியை யாரவது கடத்திச் சென்றார்களா? அல்லது காதல் விவகாரமா? என விசாரிக்கின்றனர்.

The post நர்சிங் கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Velayuthampalayam ,Vuttupalayam ,Nansey Bukulur, Karur district ,Dinakaran ,
× RELATED ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா