×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடியானது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், மற்றும் போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரி 5ம் முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ, ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.இளங்கோவன், ‘‘மனுதாரர் மீதான குற்றச்சாட்டின் தீவிரம் கருதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை நீதிமன்றம் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Sreedar ,Madurai ,Inspector ,Sredar ,Tutukudi District ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்