×

பெண்களுக்கு ரூ.1000 தமிழிசை வரவேற்பு

புதுச்சேரி: மகளிருக்கு என்ன உரிமை கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்று கவர்னர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது. மாகே பிராந்தியத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயில், பேருந்து மூலம் வருபவர்களை பரிசோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தது அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல், அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளுக்கு நேரம் செலவிடும் அரசு மருத்துவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதை தடை செய்வதற்கும் தயங்க மாட்டோம். தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு என்ன உரிமை கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

The post பெண்களுக்கு ரூ.1000 தமிழிசை வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : TN ,Puducherry ,Governor ,Tamil Sadu ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு