×

‘தம்பி சிரிக்க சிரிக்க பேசுறேன்னு நெனைக்க கூடாது.. ரொம்ப சீரியசான ஆள்.. கேடுகெட்ட ரவுடி பய நானு.. பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் கொந்தளிப்பு

சென்னை: அயனாவரம் பகுதியில் நடந்த நாம் தமிழர் ஆலோசனைக் கூட்டத்தில், சீமான் கொந்தளிப்புடன் பேசினார். சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தென் சென்னை மற்றும் வட சென்னை கட்சியின் நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி பெரிய மலை போன்றது. என் மீது வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் பொட்டு வெடி போல, அதனால் மலையை வீழ்த்த முடியாது.

13 ஆண்டுகளுக்கு பிறகாவது காவல்துறையினர் வேலை செய்யட்டுமே, இரண்டு முறை என்ன 20 முறை வேண்டுமானாலும் சம்மன் கொடுக்கட்டும். காவல்துறையினர் இவ்வளவு நாள் செக்யூரிட்டி வேலைக்காக சென்றிருந்தார்களா. இத்தனை நாள் ஏன் சம்மன் கொடுக்கவில்லை. விஜயலட்சுமி என்னுடன் படத்தில் நடித்துள்ளார். அவர் என் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த வீரலட்சுமி யார்? ஏன் அவர் யாரென்று யாருமே கேட்கவில்லை? வீரலட்சுமி பேசுவதற்கெல்லாம் சான்று உள்ளதா என யாருமே கேட்கவில்லை. இதேபோல் போய்க்கொண்டிருந்தால் ஒருநாள் எனது பிள்ளைகள் அடிதடியில் ஈடுபட்டு விட்டால் சீமான் சட்டம் -ஒழுங்கை மீறினார் என்று குறிப்பிடுவீர்களா?

அந்தம்மா (வீரலட்சுமி) சொல்லுது, ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்க்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில்மென்ட் செய்தார் என்று. அது வேறு யாருமில்லை வீரலட்சுமி தான். தற்போது அவருக்கு ஏன் கோபம் என்றால் செட்டில்மென்ட் செய்யும்போது அவருக்கு பணத்தை குறைவாக கொடுத்து விட்டேன். அதனால்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். வாய்க்கு வந்ததையெல்லாம் வீரலட்சுமி பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஜனநாயக வாதியாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்னை. எனக்கு வேறு முகம் இருக்கிறது. இந்த முகத்தையே உங்களால் பார்க்க முடியலையே.

நான் யார் தெரியுமா நான் கேடுகெட்ட ரவுடி பய. அடக்கிகிட்டு வாயை பொத்திக்கிட்டு எனது பச்சை பிள்ளைகளை பலியிடக் கூடாது என்று ஒதுங்கி இருக்கிறேன். உள்ளே சென்று விட்டால் எப்போ வருவார்கள் என்று குழந்தைகள் கேட்பார்கள். அந்த வேதனை அவர்களுக்கு வரக்கூடாது என்று நான் பொறுமையாக இருக்கிறேன். எனது கட்டைவிரல் மயிருக்கு வருவியா நீ…யார் (வீரலட்சுமி). என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என அவர் கூறுகிறார். ஒரு ஸ்கெட்ச் பேனாவை கூட உன்னால் தூக்க முடியுமா டி எனக் கூறி, வீரலட்சுமிக்கு சீமான் சவால் விட்டார்.

‘‘தம்பி நான் சிரிக்க சிரிக்க பேசுறேன்னு நினைக்க கூடாது.. நான் ரொம்ப சீரியசான ஆள்” கவனம் இல்லாம ஏதாவது பண்ணிட்டு போயிருவேன் பாத்துக்கோ. மயிரே போச்சுனு கட்சியாது கிட்சியாதுனு வெட்டிட்டு போயிட்டே இருப்பேன் நானு.. சும்மா எதாவது பேசிட்டே இருக்க கூடாது. மரியாதை இல்லாமல் பேசியது யார்? சீமான் என்றால் பான், சோன்பப்டி, சொட்டர் விற்பவனாகவும், பானி பூரி விக்கும் பயலாகவும் நினைக்கிறீர்கள். நான் முதலில் யாரென்று தெரியுமா, ஒரு லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து எனது தலைவனை பார்த்தவன். உயிரும் ஒன்னு தான். உயிரிலிருந்து விழும் மயிரும் ஒன்னு தான். எதுக்கும் பயப்பட மாட்டேன்… பயப்படற ஆள் மாதிரி தெரியுதா?

ஜெயில்ல போடுவ. போடு அதுக்கப்புறம் வெளியில விடுவ அதுக்கு அப்புறம் நான் உன்னைய விட்டுடுவேன் நினைக்கிறீயா, முதல்ல அந்த பொம்பளை யாரு? நீங்க அந்த விஜயலட்சுமி, வீரலட்சுமி ரெண்டு பேரையும் அனுப்புறீங்க. எனக்கு பிறப்பிலேயே வீரம் உள்ளது. ரத்தத்திலும் வீரம் உள்ளது. எனக்கு ரெண்டு லட்சுமியும் வேண்டாம். எனக்கு இல்லாதது பணம் தான். இரண்டு தனலட்சுமியும் இரண்டு தானியலட்சுமியும் அனுப்பிவிடு. அவதூறுகளால் அழிந்து போறவன் நான் இல்லை. நீங்கள் யார் கயல்விழியையும், தேன்மொழியையும் கூட்டிக்கொண்டு வர சொல்ல.

கயல்விழி எனது மனைவி. வழக்கறிஞர் என்ற முறையில் என்னுடன் காவல் நிலையம் வருவார் எனக்காக பேசுவார். ஆனால் தேன்மொழி ஒரு கவிஞர். அவரை ஏன் அழைத்து வர வேண்டும். நான் எனது மனைவியுடன் வருகிறேன். நீங்கள் இருவரும் வாருங்கள். காவல்துறை விசாரிக்கட்டும்,’’ என கூறினார். கலகலப்பு-2 படத்தில் நடிகர் சிவா, ஒரு காட்சியில் ரவுடிகள் சுற்றி வளைத்து மிரட்டிக் கொண்டிருக்கும்போது, காமெடியாக நடிகர் இளவரசுவைப் பார்த்து அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்து விட்டது என்று கூறுவார். அதேபோலத்தான் இப்போது சீமானின் பேட்டியை வெளியிட்டு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post ‘தம்பி சிரிக்க சிரிக்க பேசுறேன்னு நெனைக்க கூடாது.. ரொம்ப சீரியசான ஆள்.. கேடுகெட்ட ரவுடி பய நானு.. பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Chennai ,Tamil ,Ayanavaram ,Seeman ,Ayonavaram, Chennai ,
× RELATED பாஜக-வை விட குறைந்த வாக்குகள்...