×

‘நம்ம சென்னை’யில் உலக கோப்பை!

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இந்தியாவில் அக்.5ம் தேதி தொடங்கி நவ.19 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான கோப்பை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா கொண்டு வரப்பட்ட கோப்பை நேற்று மாலை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்க வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி , முன்னாள் நிர்வாகி கே.எஸ்.விசுவநாதன், இணைச் செயலாளர் ஆர்.என்.பாபா, பொருளாளர் ஜே.சீனிவாசராஜ் மற்றும் இதர நிர்வாகிகள் பங்கேற்றனர். உலக கோப்பை இன்றும் நாளையும் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

The post ‘நம்ம சென்னை’யில் உலக கோப்பை! appeared first on Dinakaran.

Tags : World Cup ,Namma ,Chennai ,ICC World Cup ODI ,India ,Namma Chennai ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி 20 ஓவர்...