புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் கைத், நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமதித்தது, கணவன் கொடுமைபடுத்தியதான பொய்யான குற்றச்சாட்டு உள்ளிட்ட மனைவியின் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், “ நீண்ட கால பிரிவினால் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லாத நிலையில், அவர் வேறொரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம் அமைதி, ஆறுதல் கிடைத்திருக்கும். மனைவியின் கொடுமைகள் நிரூபணமான வழக்கில், வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது கணவன் விவாகரத்து கோருவதற்கு தடையல்ல,” என்று கூறி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
The post மனைவியின் கொடுமை நிரூபணமான வழக்கில் வேறொரு பெண்ணுடன் வாழ்வதற்கு கணவன் விவாகரத்து கோருவது தடையல்ல: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.