×
Saravana Stores

மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான 34 இடங்களில் சோதனை பல கோடி சொத்து ஆவணம், ரூ.12.82 கோடி ரொக்கம், 1024 கிராம் தங்க நகை பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்

சென்னை: மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான 34 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதான அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன். மணல் குவாரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். ராமச்சந்திரன் நண்பர் திண்டுக்கல் ரத்தினம். இவரும் மணல் குவாரி ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார்.

ராமச்சந்திரனின் மருமகன் தொழிலதிபர் கரிகாலன். இவர்கள் நடத்தும் மணல் ஒப்பந்த குவாரிகளில் போலி பில்கள் மூலம் பலகோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவதாகவும், அந்த பணத்தை சட்டவிரோதமாக பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 12ம் தேதி தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் முத்தையா, பொறியாளர் திலகம் ஆகியோருக்கு சொந்தமான புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, வேலூர் என 6 மாவட்டங்களில் உள்ள வீடு அலுவலகங்கள் மற்றும் 8 மணல் குவாரிகள், நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

2 நாட்களுக்கு மேல் சோதனை நீடித்தது. இவர்களின் வீடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் சிக்கிய சொத்து பட்டியல் குறித்தும், வங்கி கணக்குகள் பற்றியும் தற்போது கணக்காய்வு செய்யப்பட்டு வருகிறது. இது முடிந்த பிறகு தான் எத்தனை கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று முழுமையாக தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான 34 இடங்களில் சோதனை பல கோடி சொத்து ஆவணம், ரூ.12.82 கோடி ரொக்கம், 1024 கிராம் தங்க நகை பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : sand quarry Principles ,Chennai ,Sand Quarry ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது