×

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அரிய நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும். நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ilakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழியில் (Internet Banking) தொகை செலுத்தும் முறை கணக்குத் தலைப்பு – INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES கணக்கு எண் – 330681/2999 IFSC குறியீடு எண் – SBIN0013361 இவ்அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை- 600 113. 044 – 22542992, 044 – 22541436 / 9600021709 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

The post உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை appeared first on Dinakaran.

Tags : World Tamil Rayasi Institute ,Chennai ,World Tamil Rayukshi Institute ,World Tamil Dinakarai Institute ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...