×

வெறுப்பு சந்தையை திறந்து வைத்துள்ள செய்தி சேனல்களின் 14 தொகுப்பாளர்களுக்கு ‘நோ’: ‘இந்தியா’ கூட்டணி திடீர் முடிவு

புதுடெல்லி: பிரபல செய்தி சேனல்களின் 14 தொகுப்பாளர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியில் தங்களது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறைத் தலைவரும், ‘இந்தியா’ கூட்டணியின் ஊடகக் குழு உறுப்பினருமான பவன் கெடா அளித்த பேட்டியில், ‘சில டிவி செய்தி சேனல்கள் காலை தொடங்கி நள்ளிரவு வரை வெறுப்பு சந்தையில் கடைகளை திறந்து வைத்து பேசி வருகின்றன. அந்த வெறுப்பு சந்தையின் வாடிக்கையாளர்களாக நாம் ஏன் மாற மாட்டோம். ‘வெறுப்பு இல்லாத இந்தியா’ என்பதே எங்களின் நோக்கம். சில செய்தி சேனல்களின் தொகுப்பாளர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் எங்களது இந்தியா கூட்டணியின் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள். கனத்த இதயத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகளையும், கருத்துகளையும் எதிர்த்து போராடி வருகிறோம். தொடர்ந்து போராடுவோம். சமூகத்தில் வெறுப்பு கருத்துகள் பரவ அனுமதிக்க மாட்டோம். வெறுப்பு கருத்துகள் நீங்க வேண்டும். அன்பு மேலோங்க வேண்டும்’ என்றார். முன்னதாக இந்தியா கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், பிரபல டிவி செய்தி சேனல்களில் பணியாற்றும் 14 தொகுப்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் எங்களது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஹர்தீப் பூரி கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் இந்த நடவடிக்கை ஏற்கக்தக்கதல்ல. அவசரநிலை காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்களை போன்று உள்ளது’ என்று கூறினார்.

The post வெறுப்பு சந்தையை திறந்து வைத்துள்ள செய்தி சேனல்களின் 14 தொகுப்பாளர்களுக்கு ‘நோ’: ‘இந்தியா’ கூட்டணி திடீர் முடிவு appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,India Alliance ,alliance ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்