திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கல்லுக்குடி கிராமத்தில் பூமிக்கு அடியில் நடராஜர் சிலை உட்பட 13 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குச்சிபாளையம் உள்ள பகுதியில் கிராம மக்கள் குடிநீர் இணைப்புக்கான பணி ஊராட்சி சார்பில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பகுதியில் குடிநீர் இணைப்புக்கான குழி தோண்டும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக சிலைகள் தென்பட்டது.
உடனடியாக அப்பகுதியை சுற்றி பொக்லைன் மூலம் மேலும் குழி தோண்டப்பட்டது. அதில் 13 உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நடராஜர் சிலை, பெருமாள் சிலை, அம்பாள் சிலைகள் உள்ளிட்ட சிறிய சிலைகளும் கிடைத்துள்ளது. இந்த சிலைகள் கண்டுபிடிப்பை அடுத்து தகவலறிந்து வந்த நன்னிலம் வருவாய் துறையினர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும், இந்த சிலைகள் மிகவும் பழமையானவை என்பதால் ஐபொன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிலைகள் கண்டுபிடிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள்: நடராஜர் உள்ளிட்ட 13 சிலைகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.