×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சரித்திரம் படைப்பது உறுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சரித்திரம் படைப்பது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார். இத்திட்டத்தில் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பேர் பயனடைகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; மகளிருக்கு குடும்பச்சொத்தில் சம உரிமையை நிலைநாட்டிய முத்தமிழ் அறிஞர் அவர்களின் பெயரிலே, மகளிரின் பொருளாதார உரிமையை நிலைநாட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்த காஞ்சியில் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 எனும் இந்த மகத்தான திட்டத்தை தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமே வாழ்த்துகிறது.

வரலாறாக நம்மை வழி நடத்தும் அண்ணாவின் பிறந்த நாளில், கலைஞர் நூற்றாண்டில் மகளிரின் மேன்மைக்காக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமும் சரித்திரம் படைப்பது உறுதி. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சரித்திரம் படைப்பது உறுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Udhayanidi Stalin ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...