×

மீண்டும் முற்றும் மோதல்!: மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்..ஜெயக்குமார் எச்சரிக்கை..!!

சென்னை: அண்ணா பற்றிய கருத்துக்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்:

அண்ணா பற்றிய கருத்துக்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்சியை வளர்க்க அண்ணாமலை என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளட்டும்; எங்களுக்கு கவலையில்லை. நடக்காத ஒன்றை பேசியதற்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். அண்ணா பற்றி எந்த புத்தகத்தில் அண்ணாமலை படித்தார் என்று சொல்ல வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக மீண்டும் மோதல்:

அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்தால் கூட்டணி கட்சிகளான அதிமுக பாஜக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த மறுநாளே தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக மோதல் ஏற்பட்டுள்ளது. நடக்காத விஷயங்களை நேரில் பார்த்ததுபோல மீண்டும் மீண்டும் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது.

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்:

பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அண்ணாமலை கைவிட வேண்டும். நடக்காத விஷயத்தை ஒன்றை கூறி பேரறிஞர் பெயரை களங்கப்படுத்தக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா பற்றி பேசி விட்டு மன்னிப்பு கேட்டவர் அண்ணாமலை என ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை:

மறைந்த தலைவர்களை பற்றி அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். பாஜகவை வளர்ப்பதற்காக மறைந்த தலைவர்களை பற்றி அண்ணாமலை அவதூறு பேசக்கூடாது. உலகத் தமிழர்களால் போற்றப்படும் உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. அண்ணா புகழுக்கு களங்கம் கற்பித்தது ஏற்க முடியாத ஒன்று என ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

The post மீண்டும் முற்றும் மோதல்!: மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்..ஜெயக்குமார் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Jayakkumar ,minister ,jayakumar ,anna ,
× RELATED பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி:...