
சென்னை: சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் வடிகால் பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தரமாக முடிக்கவேண்டும்.
வடிகாலில் வண்டல் வடிகட்டியை கட்டாமலும், சாலையை சீரமைக்காமலும் விட்டுவிடுவதாக ஒப்பந்ததாரர்கள் மீது புகார் எழுந்தது. பணிகள் நிறைவுபெற்றப் பின் அங்குள்ள கட்டுமான கழிவுகள் மற்றும் சகதிகளை கட்டாயம் அகற்றவேண்டும் என மாநகராட்சி தெரிவித்தது. சுற்றறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் முடித்தால் மட்டுமே ஒப்பந்த தொகை முழுமையாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயம் அமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
The post சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.