×

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்… தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்..!!

கோவை: தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெண்கள் வீடுகளில் கோலமிட்டு வரவேற்றுள்ளனர். திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறார்.

இதனிடையே நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு இன்ப அதிர்ச்சி அளித்தது. இத்திட்டம் துவங்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கோலமிட்ட பெண்கள், கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகத்தையும் எழுதி இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றே பலர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் சொன்னதை செய்துள்ளார். மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு உரிமைத்தொகை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளோம். எனத் தெரிவித்தனர்.

The post மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்… தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Thanksgiving ,Tamil Nadu ,Govai ,Chief Minister ,Municipality ,Tamil ,Nadu ,G.K. ,Kolamimir ,Stalin ,Kolamitu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...