×

அடகு கடையில் கவரிங் நகை கொடுத்து மோசடி செய்தவர் கைது

பணகுடி, செப். 15: பணகுடி அருகே கவரிங் நகை கொடுத்து மோசடி செய்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். பணகுடியைச் சேர்ந்தவர் லிங்கத்துரை (73). இவர் பணகுடி பஸ்நிலையத்தில் நடத்தி வரும் நகை அடகுகடைக்கு கடந்த 13ம் தேதி வருகைதந்த பணகுடி, மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த லார்சன் (36) என்பவர் நகை ஒன்றை கொடுத்து பணம் கோரினார். அப்போது அங்கு நகை மதிப்பீட்டாளர் இல்லாத நிலையில் அந்நகையை சோதனை செய்யாமலேயே ரூ.52 ஆயிரத்தை லார்சனுக்கு லிங்கத்துரை கொடுத்துள்ளார். பின்னர் நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதனையிட்டபோது லார்சன் கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றி பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார், லார்சனை கைது செய்து பணத்தை மீட்டார்.

The post அடகு கடையில் கவரிங் நகை கொடுத்து மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Panagudi ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் தண்ணீர் வரத்து...