×

முத்துப்பேட்டையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல்

முத்துப்பேட்டை, செப். 15: முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முத்துப்பேட்டை வட்டாரக் கிளையின் 14-வது அமைப்பு தேர்தல் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். தேர்தல் முடிவில் வட்டார தலைவராக தேவேந்திரன், வட்டார செயலாளராக நாகப்பன், வட்டார பொருளாளராக கனகா, வட்டார துணைத் தலைவர்களாக ரேவதி, சிவக்குமார், பழனிச்சாமி. வட்டார துணைச் செயலாளர்களாக மாஸ்கோ, தினேஷ், முத்துலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், வட்டார செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Primary School ,Teachers' Alliance ,Muthupettai ,Muthuppet ,Muthupettai Pudhutheru Panchayat Union Middle School ,Tamil Nadu Primary School Teachers Alliance ,District ,Muthupettai Primary School ,Teachers ,Alliance ,Election ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடி அருகே ஊராட்சி...