×

முதலாமாண்டு மாணவர்களுக்கு ரோவர் வேளாண்மை கல்லூரியில் புதியவர் தினம் தொடக்க விழா

பெரம்பலூர்,செப்.15: பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 16ம் ஆண்டு ‘‘புதியவர் தினம் 2023” தொடக்க விழா நடைபெற்றது. ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார், துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரியல் துறை தலைவர் சோமசுந்தரம் பங்கேற்றார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வஹாப், கல்வி ஒருங்கினைப்பாளர் சக்தீஸ்வரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஆசிரியர் ஆலோசகர் அப்துல் ரகுமான் அனைவரையும் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜெயசீலன், அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் முதலாமாண்டு ஒருங்கினைப்பாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

The post முதலாமாண்டு மாணவர்களுக்கு ரோவர் வேளாண்மை கல்லூரியில் புதியவர் தினம் தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Fresher's Day Commencement Ceremony ,Rover College of ,Agriculture ,Perambalur ,Freshman's Day 2023 ,Rover Agriculture College ,Fresher's Day ,Dinakaran ,
× RELATED பயிர் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு மையங்கள்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்