×

வேனில் கூவி, கூவி விற்பனை உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம்,செப்.15: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 108 பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட பிச்சனூரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பள்ளி தலைமையாசிரியர் கலைமணி முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் 108 பணியாளர்கள் கணபதி மற்றும் வெற்றிவேல் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து விளக்கி கூறினர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று விழிப்புணார்வு பெற்றனர்.

The post வேனில் கூவி, கூவி விற்பனை உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : World First Aid Day ,Jayangondam ,Ariyalur ,Jeyangondam ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை