×

கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

போச்சம்பள்ளி, செப்.15: ஆனந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்தூர் சரக அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் கோட்டூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். குண்டு எறிதல் போட்டியில் ரிஷிகா முதலிடம், ஜபீனா 3ம் இடம், உயரம் தாண்டுதலில் தீபா முதலிடம், 80மீ தடை ஓட்டத்தில் ரிஷிகா 2ம் இடம் பெற்றனர். சதுரங்க போட்டியில் 3 மாணவர்களும், கேரம் போட்டியில் 4 மாணவர்களும், வளைபந்து போட்டியில் 4 பிரிவுகளில் முதலிடம் பெற்று 4 மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்கள் சர்ஜான், அசாருதீன், முனிராஜ், சித்ரா மற்றும் அருள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியை மௌனசுந்தரி பாராட்டினார்.

The post கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Kotur Govt School Girls ,Bochambally ,Anandur Government Higher Secondary School ,Mathur Sarka ,Kotur Government School ,Kotur Government School Girls ,Dinakaran ,
× RELATED கால்வாயில் விழுந்த பெண் சடலமாக மீட்பு