×

அரசு கல்லூரியில் செஸ் போட்டி

காரிமங்கலம், செப்.15: காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செஸ் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்து பேசினார். உடற்கல்வி இயக்குனர் (பொ) மதிவாணன் வரவேற்றார். கல்லூரியில் படித்து வரும் 13 துறைகளை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் 2ம் ஆண்டு தமிழ் துறை மாணவி மஞ்சு முதல் பரிசையும், ஊட்டச்சத்து துறை 3ம் ஆண்டு மாணவி சுரேகா, 2ம் பரிசையும் 3ம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி சங்கவி 3ம் பரிசையும் வென்றனர். இதற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செந்தில்குமார், துறை தலைவர்கள் ஜெயசீலன் ரமேஷ், இளந்திரையன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post அரசு கல்லூரியில் செஸ் போட்டி appeared first on Dinakaran.

Tags : Government ,College ,Karimangalam ,Karimangalam Government Women's Arts and Science College ,Keita ,Government College ,Dinakaran ,
× RELATED செங்கை அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம்