×

மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் பஞ்சாலைகள் சங்கம் கோரிக்கை மனு

 

ராஜபாளையம், செப்.15: தமிழ்நாடு முழுவதும் நூற்பாலைகள் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி ராஜபாளையத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு விரைவு அஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நூற்பாலை அதிபர்கள் சங்கம், பருத்தி பஞ்சு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம் கழிவு பஞ்சாலைகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவிலேயே தொழில்துறை முதன்மை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் கூட்டப்பட்டுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்து, பழைய மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தபாலில் மனு அனுப்பினர். இதில் ராஜபாளையம் பருத்தி பஞ்சு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயலாளர் கோபால்சாமி, ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் தலைவர் இளவரசு, வேஸ்ட் காட்டன் அசோசியேஷன் தலைவர் ராம்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் பஞ்சாலைகள் சங்கம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : panchals ,Rajapalayam ,Tamil Nadu ,chief minister ,
× RELATED ராஜபாளையத்தில் வரதட்சணை எதிர்ப்பு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்