
கம்பம், செப். 15: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மருத்துவர் அணி சார்பில் கம்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 ஆயிரம் உபகரணங்களை எம்எல்ஏ ராமகிருஷ்ணன் வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு, கம்பத்தில் திமுக மருத்துவர் அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்களான எடைபார்க்கும் கருவி, உயரம் பார்க்கும் கருவி, ரத்த அழுத்தமானி, போர்செப்ஸ், சர்க்கரைஅளவீட்டு கருவி, டிரே, கத்திரிக்கோல், நாற்காலிகள், எவர்சில்வர் தண்ணீர் கேன் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக தேனி தெற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் மீனாட்சி சுந்தரத்திடம் உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட மருத்துவர்அணி தலைவர் டாக்டர் அழகர்சாமி, துணைத் தலைவர்கள் டாக்டர் ஜெயன், டாக்டர் சிவ இளங்கோ, கம்பம் நகர திமுக செயலாளர் வீரபாண்டியன், அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சசி கோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கம்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள்: திமுக மருத்துவர் அணி சார்பில் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.