×

கலைஞர் நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம்

போடி, செப். 15: போடி அருகே டொம்புச்சேரியில் தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுகன்யா தலைமை வகித்தார். தேனி வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் பாண்டியராஜ ன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமினை தேனி வ டக்கு மாவட்ட திமுக செயலாளர் த ங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வகித்தார்.இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு டாக்டரிடம் தகுந்த ஆலோசனைகள் பெற்று மருந்து மாத்திரைகள் இலவசமாக பெற்றனர். முகாமில் டாக்டர்கள் போடி பாலசுப்ரமணி, ராஜபாண்டியன், பொன்ராஜ் உட்பட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Free Medical Camp ,Bodi ,Theni North District Medical Team ,Dombuchery ,Artist ,Centenary Celebration Free Medical Camp ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி