×

முதுகுளத்தூர் அருகே ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு

 

சாயல்குடி, செப்.15: முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் ஐவர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் தவசியாண்டி, ஜெகநாதன், சிவமணி, சித்திரவேல், முத்துமணி ஆகியோர் நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த 66ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கீழத்தூவலில் உள்ள அவர்களது நினைவு தூணில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நினைவிடத்தில் கிராம பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் கட்டி தரவேண்டும் என கிராமமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நினைவு தினத்தையொட்டி முதுகுளத்தூர் டி.எஸ்.பி சின்னகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post முதுகுளத்தூர் அருகே ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ivar Memorial Day ,Bapalathur ,Sayalkudi ,Dhuttuval ,Bhubalathur ,Ivor Memorial Day ,Dinakaran ,
× RELATED தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீரில்...