×

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு

 

கூடலூர், செப். 15: தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாவனாநகர் ஊராட்சி ஒன்றிய துக்கப்பள்ளி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரீத்தி, காலை சிற்றுண்டி, உணவு சமயலறை, தண்ணீர் தொட்டி, வகுப்பறைகள், பள்ளி வளாகம், கழிவறைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆய்வு செய்தபின் மாணவர்கள், சமையலர் மற்றும் ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு, கைகழுவுவதின் முக்கியத்துவம், குடியிருப்பு பகுதிகள் பள்ளி வளாகம் சுத்தமாக வைக்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருவதால் புகையிலை, கூல் லிப் போன்ற போதைப்பொருளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா? பள்ளிக்கு அருகேயுள்ள கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தி வாரத்தின் முதல்நாள் உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும் ஆலோசனை வழங்கினார்.

The post ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Panchayat Union School ,Cuddalore ,Bhavananagar Panchayat Union Dukkapalli ,Devar Solai ,Municipality ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய...