×

மதுரை கலெக்டர் ஆபீசில் ஆர்ப்பாட்டம்

 

மதுரை, செப்.15: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஎஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். சத்துணவு மாநில செயலாளர் நூர்ஜஹான் வாழ்த்துரை வழங்கினார் ஐசிடீஸ் மாவட்ட செயலாளர் மேனகா, டான்சாக் முனியசாமி, மணினிகண்ணன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், கல்யாணசுந்தரம், மாரியப்பன், வளர்மதி கோரிக்கை விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் மாநில நிர்வாகிகள் நடத்தி வரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 10 பெண்கள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருவாய் துறை அழகேசன் நன்றி கூறினார்.

The post மதுரை கலெக்டர் ஆபீசில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Collector Office ,CBS ,Madurai Collector ,Office ,CBS District ,Madurai Collector Office ,Dinakaran ,
× RELATED சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதம்